தமிழ்
Call +94 74 092 7382
முப்பத்தொரு நாட்கள் உருண்டோடி மறைந்தாலும்,
எம் விழிகளை விட்டு உங்கள் நினைவுகள் அகலவில்லை.
உங்கள் நினைவுகள் எம் இதயத்தில் என்றும் வாழும்,
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
எமது குடும்பத் தலைவியின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலை சாத்தியவர்களுக்கும், மற்றும் அனைத்து வழிகளிலும் ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்

28 Apr 1944 - 16 Jun 2025