தமிழ்
Call +94 74 092 7382
யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் பதிவாளர் அமரர் இளையதம்பி ஆனந்தநடராஜாவின் அன்பு மனைவி மாதினியார் (எழுத்தாளர் ஆனந்தி) அவர்கள் 06.02.2026 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், ஏழாலை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் {ஆனந்த வாத்தியார்} பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும், சாந்தகுமார் (இராமகிருஸ்ண மிசன் தங்குமிட விடுதி முகாமையாளர்), சிவகுமார் [சுவிஸ்], ஜெகத்ஜெனனி [பிரான்ஸ்], அமரர் ஓங்காரனி, ஸ்ரீதேவி [லண்டன்] ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாமகேஸ்வரி [Presbyterian girls school Colombo 10], சிவகௌரி [சுவிஸ்], அமரர் வேணீஸ்வரன் மற்றும் ஜெயசீலன் [லண்டன்] ஆகியோரின் அன்பு மாமியாரும், அமரர்களான மகேஸ்வரி, நல்லை நாதன், வைகுந்தவாசன் மற்றும் பத்மாவதி, நவமணி, கதிர்காமத்தம்பி, ரகுநாதன், புனிதவதி, பரமஞானம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,
அமரர்களான முருகவேள், முத்துக்குமாரசாமி, பகவதி, சிவக்கொழுந்து, பாண்டிமாதேவி, சரவணபவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
வினுஷன், ஜனந்தன், லக்சுமிதா, வர்சினி, ஹர்சினி ,மதுவதி ,ஸ்ரீகணேஸ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09.02.2026 திங்கட்கிழமை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
ஆ.சாந்தகுமார் 0774066274
ஆ. சிவகுமார் 0112721092
மகன்
, இலங்கை
கைபேசி:
+94 774066274
31 Mar 1942 - 06 Feb 2026