புங்குடுதீவு 9ம் வட்டாரம் (வல்லன்) பிறப்பிடமாகவும் இல. 145,எலிஹவுஸ் ரோட், கொழும்பு -15 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. குழந்தைவேலு பாலரட்னம் அவர்கள் 29.09.2026 செவ்வாய்க்கிழமையன்றுnசிவபதமடைந்தார். அன்னார் குழந்தைவேலு சின்னதங்கம் தம்பதிகளின் மகனும் முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சுகிர்தராணி, மரகதமணி, வீரசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் திருச்சிற்றம்பலத்தின் உடன்பிறவா சகோதரரும் துஸ்யந்தி, பிரதீபா, பார்தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் எல்லாளன், பிரியங்கா, சரளா ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான கனகரட்னம்,வைரவநாதன்,சிவானந்தராசா மற்றும் உமாதேவி ஆகியோரின் மைத்துனரும் நகுலேஸ்வரன், மகேந்திரன், காலஞ்சென்ற சுபேந்திரன், குகராஜா ஆகியோரின் மைத்துனரும் அபினா, அபிஷா, கவிஷினி, ஓவியா, சேராம், இனியா, வினய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். தகவல் - குடும்பத்தினர் 077 8732333