யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கொழும்பு பம்பலபிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட DR. கனகசபை தாமோதரம்பிள்ளை சிவபாதம் (Retd.DPDHS) 15.07.2026 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு & திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற DR & திருமதி சிவஞானரட்னம் தம்பதியினரின் அன்பு மருமகனும். திருமதி முகுந்தினி அவர்களின் அன்புக் கணவரும். கணேசன், கனகசபை, காலஞ்சென்ற மல்லிகாதேவி. சீதாதேவி, சாவித்திரிதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும். அமுதினி. ஆரணி. அருணன் ஆகியோரின் பாசமிகுதந்தையும், ஜனார்த்தனன், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும், குகன், ஐயனி, யாதவன்,நிருசன். லத்திகா. ஏகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணியளவில் Borella Jeyaratne மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 3.00 மணியளவில் இறுதி கிரியைகள் நடைபெற்று 5.00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: Aarani - 0770464440