மலேசியாவை பிறப்பிடமாகவும் இலங்கையில் சுழிபுரம், பன்னாலை ஆகிய இடங்களில் வாழ்ந்து, வெள்ளவத்தையை வசிப்பிடமாக கொண்டிருந்த திருமதி சிவஞானவதி ஏரம்பமூர்த்தி அவர்கள் 18.07.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை ஏரம்பமூர்த்தி (சமாதான நீதவான், மாவட்ட அதிகாரி - அஞ்சல் துறை) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சிவசங்கரப்பிள்ளை - பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் சிவதாசன் (காலஞ்சென்றவர்), சிவநேசன் (காலஞ்சென்றவர்), சிவயோகவதி, நீலாதேவி (காலஞ்சென்றவர்), சாந்திமணி, மனோகரன். வீமதேவன் ஆகியோரின் அன்பு சகோதரியும் மற்றும் ரகுவதனா, தேவகி, நிரந்தினி, ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுரேஸ், யோகசந்திரன், அருள், சுகனியா ஆகியோரின் அன்பு மாமியாரும் அனோஜன், ரிஷி, அர்ஷ்விந், சினேகா, ஆகாஷ், அபினாஷ் ,விஷால், கரீஸ், ஆதிரன், விபேக்கா, மகீஷா, கம்சிஜா ஆகியோரின் அன்பு பாட்டியும் மற்றும் அன்வித் இன் பூட்டியுமாவார். அன்னாரின் பூதவுடல் வெள்ளிக்கிழமை 24.07.2026 மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை 25.07.2026 காலை 8.30 மணி முதல் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று பின்னர் மதியம் 1.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு ரமணன் - 0763241280 ஜெயம் - 0777791189 பவன் - 0777279205