திதி: 24.07.2026 [வெள்ளிக்கிழமை] பத்துமாதம் சுமந்து எமைப் பாரினிலே பெற்றெடுத்து வித்தாக விதைத்து விருட்சமாகப் பார்த்தவளே சொத்தாக எம்மோடு உடனிருப்பாய் என மகிழ்ந்திருக்க பத்தாவின் பதம்தேடி பறந்தோடிப் போனாயோ மாதங்கள் ஆறம்மா நீ எமை மறந்து பயணித்து தேறுதில்லை எம்மனசு ஆறுதில்லை ஆரிருந்தும் பேறதுவே பெற்றவள் உடனிருப்பது எனஇருக்க வேதனையைத் தந்துவிட்டு விரைந்ததேன் கூறம்மா அன்னையின் ஆறாவதுமாத நினைவுகளில் பிரார்த்திக்கும் குடும்பத்தினர்