திருச்சி மாவட்டம், இனாம் கல்பாளையம் கிராமம், தியதலாவையை சேர்ந்த வெ.சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் திங்கட்கிழமை 27.07.2026 அதிகாலை 4,20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கஹகொல்ல தோட்டத்தை சேர்ந்த திருமதி.வெள்ளாந்துரை பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான, தியதலாவையைச் சேர்ந்த திரு.திருமதி.கு.காளியாப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் மருமகனும், சு.லலிதாவின் அன்புக் கணவரும், ந.சங்கீதா. ஹ.மலர்ஜிதா ஆகியோரின் அன்பு தந்தையும், வீ.நவிச்செந்தில் (நவீன்) (Delta Metalics), சி.ஹரிஹரன் (Badulla Vael Distributors) ஆகியோரின் மாமனாரும், அமரர்களான திரு.கருப்பையா பிள்ளை, திரு.நடராஜா பிள்ளை, திரு.வைத்திலிங்கம் பிள்ளை, திருமதி.சுப்புலெட்சுமி, திரு.கணேசன் பிள்ளை (திருச்சி), திருமதி.தங்கம்மாள் மற்றும் திருமதி.தனலெட்சுமி, திரு.ஜெகநாதன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும், திரு.ஜெகநாதன் (EMEE Collection), திரு.லோகநாதன் (Victories), திரு.குணசேகரன் (Ganesh Textiles), திரு.ரகுநாதன் (Max Win), திரு.ராமநாதன் (Plus Mark), திரு.புஷ்பராஜ் (Jey Mark), ஆகியோரின் மாப்பிள்ளையும், காலஞ்சென்றவர்களான திரு.சுப்பையா பிள்ளை, திரு.அருணாசலம் பிள்ளை மற்றும் திருமதி.வசந்தா (திருச்சி). திருமதி.மாலதி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற திரு. பெ.கந்தசாமி பிள்ளை, திரு.கருப்பையாபிள்ளை ஆகியோரின் சகலையும், காலஞ்சென்ற வீரப்பன் பிள்ளை (KMK), மற்றும் திருமதி, கமலம், காலஞ்சென்றவர்களான, திரு.சிவலிங்கம் பிள்ளை, திருமதி.கனகாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும், தானேஷ், தியக்ஷா, ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை 28.07.26 பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை 29.07.26 புதன்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் ஈமக்கிரியைகள் இடம்பெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : திரு.ஜெகநாதன் (சகோதரர்) வீ.நவிச்செந்தில் (நவீன்) - மருமகன் (Delta Metalics) சி.ஹரிஹரன் மருமகன் (Badulla, Vael Distributors) 071 641 9310 / 077 767 9686