யாழ். புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு, மஸ்கட் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட சத்தியபாமா சற்குருநாதன் அவர்கள் 03.08.2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வதுரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கமலாதேவி, ருக்மணி கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும் காலஞ்சென்ற வைத்திய கலாநிதி செல்லதுரை சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும் இரவீந்திரநாதன் (ரவின்), USA அவர்களின் அன்புத்தாயாரும் சுதர்ஷினி (சுதா) அவர்களின் அன்பு மாமியாரும் நிலா, தரன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் கங்காதரன், தாமரா, அன்னலட்சுமி (பவராசா), ஜெயலட்சுமி (சட்டநாதன்), வைத்திய கலாநிதி. கமலநாதன் (வைத்திய கலாநிதி ஆனந்தி), அருமைநாதன் (அருந்தவராணி), மகாலட்சுமி (சுப்பிரமணியம்), ஜெகநாதன் (ரமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 06.08.2026 நாளை வியாழக்கிழமை மு.ப.9.00 மணி முதல் பி.ப.4.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப. 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு : விஷாகா - மருமகள் (இலங்கை) +94763879369 ரவீன் - மகன் (அமெரிக்கா) +14123884892 தகவல் : குடும்பத்தினர்