மலராய் பூத்த வாழ்க்கை இன்று மண்ணில் மறைந்தாலும். மனதில் பதித்த நினைவுகள் என்றும் மறையாது ... உங்கள் சிரிப்பும் அன்பும் என்றும் எங்கள் இதயங்களில் நிலைத்து நிற்கும் .... கண்ணீர் மல்கிய நினைவஞ்சலி ...! ஹாலி எல, ரொக்கத்தனை தெற்கு பிரிவை பிறப்பிடமாகவும் அப்புத்தளை பங்கட்டி புதிய வீடமைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட, திரு. வெல்லசாமி அவர்களின் அருமை மகளும், திரு. ஆசைதம்பி அவர்களின் அன்பு மனைவியுமான அமரர் ஜெயசித்ரா அவர்கள் கடந்த 08.07.2026 அன்று இறைவனடி சேர்ந்த அத்தருணம் முதல் ஓடோடி வந்து அனைத்து வகையிலும் உதவிய அன்புள்ளங்களுக்கும், எமது மனத்துயரில் பங்கேற்றதுடன் ஆறுதலை பகிர்ந்து கொண்ட பண்புடையோருக்கும். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அத்தனை அன்பர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நிறைநன்றிகள் எஞ்ஞான்றுமே. அன்னாரின் 31ஆம் நாள் ஆத்ம சாந்தி கிரியைகள் 07.08.2026 இன்று வெள்ளிக்கிழமை காலை வேளையில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் அனைவரையும் வருகை தந்து கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். இவ்வண்ணம், தந்தை திரு. வெல்லசாமி. கணவர் திரு. ஆசைதம்பி, அன்புப்பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள். தொடர்புகளுக்கு : 076 601 3215