பதுளை கவரகலை தோட்டத்தில் நீண்டகாலமாக கள அதிகாரியாகவும்கிராண்ட்பாஸ் விசாகா அடகு ஸ்தாபனத்தில் கணக்காளராகவும் கடமையாற்றினார். கெட்டபுலாவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு-15ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்பரம் ராமலிங்கம் அவர்கள் 05.08.2026 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் திருமதி. யமுனாதேவியின் அன்புக்கணவரும் ரஞ்ஜனி. ரஞ்ஜித்குமார். ரவிக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், அஷோக்குமார், புவனேஸ்வரி லோகதர்ஷனியின் மதிப்பிற்குரிய மாமனாரும் ரிதீஷ். ராகேஷ், அனுஷ்கா ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் உற்றார் நண்பர்களின் பார்வைக்காக 6ம் திகதி முதல் 8ம் திகதி ஆகஸ்ட் வரை காலை 9.00 மணிமுதல் இரவு 10.00 வரை பார்வைக்காக வைக்கப்பட்டு 8ம் திகதி காலை 10.30 அளவில் தகனக் கீரியைக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவரின் தம்பிமார் தங்கைமாரும் அவரின் ஆசியை சிரமேந் கொள்கின்றனர். "மலைகளின் அரசனாக துள்ளித்திரிந்த எம் மலையரசன் மீளாத் துயில்கொள்ள விம்மும் இதயம் மறவாது உங்கள் பசுமையை" இல.20/4, மாதம்பிட்டிய வீதி, கொழும்பு-15