மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1932
Month
February
Date
19
திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்
இறப்பு
Year
2026
Month
August
Date
10
திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்

colombo

மிகுந்த துயருடன் எமது அன்பிற்கினிய திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10.08.2026 அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத்தருகின்றோம்.மலேசியாவில் பிறந்து, உடுப்பிட்டி மற்றும் கொழும்பில் வசித்து வந்த அன்னார். அமரர் திரு. நாகலிங்கம் -திருமதி. இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும். அமரர் திரு. தர்மலிங்கம் - திருமதி. கண்மணி தம்பதியினரின் மருமகனும், அமரர் திருமதி. பத்மாவதி அவர்களின் அன்புக் கணவருமாவார். அன்னார் சித்திரா. குலேந்திரன். பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்வகுமார், சுகிர்தினி. திருலோககுமார் ஆகியோரின் மாமனாருமாவார். சிந்தியா. சுவாதி, இந்துப்ரியா. விஷ்ணுர்ஜன். ஆகாஷ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனாவார். அவர் சுசிலாதேவி மற்றும் சக்திவேலின் அன்புச் சகோதரரும், டாக்டர் ஜெயரத்தினம் மற்றும் அமரர் ரஞ்சினியின் மைத்துனரும் ஆவார். அன்னார் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி விஜயரத்தினம் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு மற்றும் விவேகானந்தா கல்லூரி, கொழும்பு ஆகியவற்றில் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். அன்னாரின் பூதவுடல் 12.08.2026 அன்று காலை 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜெயரத்ன இறுதிச்சடங்கு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிச்சடங்கு 13.08.2026 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்று, பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக. துயருற்ற குடும்பத்தினர்

← Back to Obituaries