திருச்சி மாவட்டம், தத்தமங்கலம் கிராமம், சாத்துடையான் கோத்திரம், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம்பிள்ளை, காமாட்சி அம்மாள் தம்பதிகளின் புதல்வரும் காலஞ்சென்றவர்களான பண்டாரவளை பெரியண்ணன்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிகளின் மருமகனும் கனகபூரணத்தின் அன்புக்கணவருமாகிய திரு.சு.திருவாசன் அவர்கள் 15.08.2026 இரவு 9.45 மணியளவில் சிவலோகபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னார் லோகஜயந்தி (கொழும்பு), சுபாசந்தர் (கனடா), இராஜ சேகரன்(கென்யா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் வை. தேவராஜூ (Romax Hardware Centre, Colombo), ஷர்வாந்திகா(கனடா), ஜனனி (கென்யா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்றவர்களான செல்லம்மாள் (திருச்சி). தைலம்மை(கொழும்பு), முத்தையாபிள்ளை (பொகவந்தலாவ), கணேசன் (Lotus Hardware, Hatton) . முத்துக்கண்ணு (அம்பிட்டிய) ஆகியோரின் அன்புச்சகோதரரும் காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை(திருச்சி), சுப்பிரமணியம்பிள்ளை (கொழும்பு), பெரியசாமிப்பிள்ளை(அம்பிட்டிய) ஆகியோரின் மைத்துனரும் முத்துக்கண்ணு (Saravanas Stores. பொகவந்தலாவ), சீதாலெட்சுமி (கொழும்பு) ஆகியோரின் கொழுந்தனாரும் காலஞ்சென்றவர்களான வையாபுரிபிள்ளைமீனாட்சி அம்மாள் (பண்டாரவளை), நலமுடன் ராமலிங்கம் (வத்தளை), காலஞ்சென்ற சிவசங்கரி, காலஞ்சென்ற கணேசன்(Saravanas Textiles), நலமுடன் ராஜாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும்லஷாந்த் (Australia), ஆகாஷ் (Canada), ஜய்நிதேஷ் (Chennai) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் லயா. ஸ்ரீதி (கனடா), வேதவ்.ஸ்ரீகிரிஷவ் (கென்யா) அகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இல.43/15, 2 nd Cross Street, இராமலிங்கநகர், South Ext. திருச்சி இல்லத்தில் திங்கட்கிழமை காலை 6.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 3.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 5 மணியளவில் பூதவுடல் குழுமிக்கரை ரோடு, அண்ணாநகர் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வறிவித்தலை உற்றார். உறவினர். மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். தகவல் : கனகபூரணம் (மனைவி) சுபாசந்தர் (மகன்), ஷர்வாந்திகா (மருமகள்) இராஜசேகரன் (மகன்), ஜனனி (மருமகள்) லோகஜயந்தி (மகள்), தேவராஜு (மருமகன்)