நயினாதீவு 2ம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் நயினாதீவு. கொக்குவில் மற்றும் கல்கிசைஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர் இரகுநாதன் சிவபாதசேகரம்அவர்கள் 25.08.2026 செவ்வாய்க்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இரகுநாதன் - சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும் காலஞ்சென்றவர்களான இராமநாதன் - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமருமகனும் பாக்கியரெத்தினத்தின் பாசமிகு கணவரும் மணிகரன். சிவாணி, ஜெனனி.ஷர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் தயாநிதி. சிவனேசன், ஜனகன். சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சஞ்ஜய், சஜிந், சிவானுஜன், சுருதி, சுரபி, மிதுன். அஷ்வி ஆகியோரின்பாமசிகு பேரனும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவஞானசுந்தரம்பிள்ளை. சிவாநந்தராஜா, நாகேஸ்வரி, தணிகாசலம் ஆகியோரின் அன்புசகோதரரும் காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம். கற்பகம். தாமோதரம்பிள்ளை மற்றும் நாகரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 21A, புனித சில்வஸ்டர் வீதி, கல்கிசையில் (21A,St.Sylvetser Road, Mount Lavania) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று(28.08.2026) வெள்ளிக்கிழமை மற்றும் நாளை (29.08.2026) சனிக்கிழமை ஆகியநாட்களில் வைக்கப்பட்டு அன்னாரிள் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (30.08.2026)ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்று மதியம் 12.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் - குடும்பத்தினர் தொடர்பு: மணிகரன் (மகன்) 0769840294