அன்பிற்கும் பண்பிற்கும் உதாரணமாய் ஆலம் விழுது போல் அனைவரையும் அனைத்து இப்புவியில் அன்பின் பெருமை சேர்த்து அனைவருக்கும் எடுத்துக் காட்டாய் நேற்றுவரை நிஜமாக இருந்து இல்லறத்தில் நல்லறமாய் வாழ்ந்து இன்று நினைவாகிப் போன ஐயாவே ! எங்கள் ஆலய அடியார்களுக்கும் ஆயுள் வரை அன்னம் வழங்கிய பெருந்தகையே தங்களின் ஆத்மா அனைவருக்கும் அன்னையாம் ஸ்ரீதேவி கருமாரியின் பாதார விந்தங்களை அடைய பிரார்த்திக்கின்றோம் குடும்பத்தலைவரை இழந்து துன்புறும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எங்களின் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம். கருவேற்காடுபதி, ஸ்ரீ தேவி கருமாரியம்மன் தேவஸ்தானம் ஹல்துமுல்லை - பெரகலை அறங்காவலர் சபை, பரிபாலன சபை, தொண்டர் சபை, ஆலய குருக்கள் மற்றும் பிரதேச மக்கள்