எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் எல்லோர் உள்ளத்திலும்நீ நிறைந்தவரே நினையாத நேரத்தில் மின்னல் போல் நீங்கள் மறைந்தாலும் கண்ணீரால் எம்மை உருக வைத்து ஆறவும் முடியவில்லை அமுத கண்ணீரும் காயவில்லை, ஓயாது உங்கள் நினைவு வாட்டுதே, உங்கள் பிரிவு ஆறமுடியாத சோகமே. இறைவன் எமக்காய் படைத்த கருவறை தந்த கடவுளின அருட்கொடை பெரியண்ணா. கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் கண்களை விட்டு உயிர் உள்ள வரை மறையமாட்டீர்கள் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.