மரண அறிவித்தல்

Obituary Notice
✦ ✦ ✦
பிறப்பு
Year
1926
Month
August
Date
03
திரு.சவரிமுத்து குணரட்னம்
இறப்பு
Year
2026
Month
September
Date
07
திரு.சவரிமுத்து குணரட்னம்

srilanka

(இளைப்பாறிய S.P.H.I(D), முன்னாள் இடம் பெயர்ந்த வடக்கு / கிழக்கு ஓய்வூதிய சங்க செயலாளர் (தமிழ் சங்கம்) பழைய சோடா கம்பனி வீதி, மல்லாகத்தை பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, வெயிலுகந்த விநாயகர் கோயிலடியை வதிவிடமாகவும், தற்சமயம் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சவரிமுத்து குணரட்னம் அவர்கள் 07.09.2026 திங்கட்கிழமை நண்பகல் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து. வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும். தங்கமணி குணரட்னம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற வசந்தன். ரஞ்சனா (ரஞ்சு - கொழும்பு). திலகரஞ்சனி (திலகா-Australia) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீஸ்கந்தநிதி (கொழும்பு). ஜெயநாதன் (Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும். விஷாலி, ருக்ஷான், பிரசன்னா, கௌதம், மித்ரா, விதுஷன் ஆகியோரின் அன்பு தாத்தாவும், சஷ்விகாவின் பாசமிகு பூட்டனும், காலஞ்சென்றவர்களான துரை, இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 10.09.2026 வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி, மதியம் 1.00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் : நிதி (மருமகன்): 0776316831 திலகா (மகள்) : +61403507625 (Whatsapp)

← Back to Obituaries