அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தின் நிர்வாக சபையின் உறுப்பினரான திரு.சிதம்பரம் தியாகராஜா அவர்கள் 08.09.2026 அன்று ஐயப்பனிடம் சரணமானர் என்ற செய்தியை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். அன்னார் இக்கோவிலின் ஆரம்ப நாளிலிருந்து அதன் கட்டுமான வளர்ச்சிகளுக்கும் நிர்மாண பணிகளுக்கும் பெரிதும் பங்காற்றியதுடன். நிர்வாக சபை உறுப்பினராக அவர் செய்த தொண்டுகள் அளப்பரியன். கோவிலின் அனைத்து விசேஷங்களிலும் குறிப்பாக திருவிழாக்காலங்களில் முன்னின்று உழைத்து அவ்விழாக்களை சிறப்பாக நடைபெறுவதற்கு முழுமூச்சாக உழைத்தவர். கோவிலின் வளர்ச்சிப் பாதையில் அவரின் பங்களிப்பு மகத்தானது. கோவிலின் நிர்வாகத்தில் அவரின் ஆலோசனைகள். வழிகாட்டுதல்கள் ஆலய பரிபாலனத்திற்கு மிகுந்த உந்துசக்தியாக இருந்தன என்பதை இவ்வேளையில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம். இவரது இழப்பு ஆலய நிர்வாகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது. அன்னாரின் பூதவுடல் கொழும்பு பொரளை ஐயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டு 10.09.2026 மாலை 3.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருடன் வாடும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அளுத்மாவத்தை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தின் நிர்வாக சபை தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. தகவல்: ஆலய நிர்வாக சபை அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானம் - கொழும்பு - 15